தமிழகம்

1.டெல்லியில் நடந்த வேளாண் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, உணவு உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது வழங்கினார். இந்த விருதுடன் 5 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.


இந்தியா

1.பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.


உலகம்

1.மொரிசியஸ் நாட்டில் கிரெடிட் கார்ட் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2.சீன அதிபராக ஸி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் (Rudolf Diesel Birth Anniversary Day).
ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று பாரிஸ் நகரில் பிறந்தார். இவரின் கண்டுபிடிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் நீராவி இயந்திரத்திற்குப் பதிலாக டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவரின் கண்டுபிடிப்பு உலகை வேகமாக மாற்றி அமைத்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு