தமிழகம்

1.தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.


இந்தியா

1.திரிபுரா மாநிலத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 1,650 கோடி நிதி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி(ஏடிபி) ஒப்புதல் அளித்துள்ளது.

2.பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படுவதாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஃபிட்ச் நிறுவனம் 6.6 சதவீதமாக குறைத்துள்ளது.

2.இந்தியாவில் மிகவும் மனம் கவர்ந்த நிறுவன பிராண்ட் பட்டியலில் அமேசான் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ரான்ட்ஸ்டட் எம்ப்ளாயர் பிராண்ட் ரிசர்ச் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.எகிப்து முன்னாள் அதிபரும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவருமான முகமது மோர்சி நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.


விளையாட்டு

1.கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடார் அணியை வீழ்த்தியது.


ன்றைய தினம்

  • சென்னை அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது (1954)
  • எகிப்து குடியரசானது (1953)
  • சலி ரைட், விண்ணுக்கு சென்ற முதல் அமெரிக்க பெண் ஆனார்(1983)
  • இந்திய ரூபாய், அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)
  • ஜெனீவாவில் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டது(2004)

– தென்னகம்.காம் செய்தி குழு