Current Affairs – 18 June 2018
தமிழகம்
1.அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்களை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்தியா
1.ஜிசாட்-11 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஒப்புதல் அளித்துள்ளது.
2.விமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் கழிப்பறைகள் தரம் உயர்த்தப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
வர்த்தகம்
1. இரண்டு ஆண்டுகளாக செயல்படாது, பெயரளவில் உள்ள, 4 லட்சம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
உலகம்
1. மேசிடோனியா நாட்டின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம், அந்த நாட்டுக்கும், அண்டை நாடான கிரீஸுக்கும் இடையே கையெழுத்தானது.இதுவரை “மேசிடோனியா குடியரசு’ என்றழைக்கப்பட்டு வந்த அந்த நாடு, “வடக்கு மேசிடோனியா’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.
விளையாட்டு
1. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் தோல்வி அடைந்தது.குரூப் டி பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியாவை 2-0 என வென்றது குரோஷியா.
2.ஸ்டட்கர்ட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர். இதன் மூலம் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.
இன்றைய தினம்
- சென்னை அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது (1954)
- எகிப்து குடியரசானது (1953)
- சலி ரைட், விண்ணுக்கு சென்ற முதல் அமெரிக்க பெண் ஆனார்(1983)
- இந்திய ரூபாய், அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)
- ஜெனீவாவில் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டது(2004)
–தென்னகம்.காம் செய்தி குழு