தமிழகம்

1.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை அக்டோபர் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது.

2.தமிழகத்தில் 1248 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்று தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது.

2.தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில்  நிறைவேறியது.

3.நேர்மையின்மை, போதிய திறமையின்மை உள்ளிட்டவை காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில் 1,083 உள்துறை அமைச்சக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4.பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது.


வர்த்தகம்

1.‘மைண்டு டிரீ நிறுவனத்தின், நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான உந்துதலை வழங்குவோம்’ என, அந்நிறுவன பங்குதாரர்களுக்கு, உறுதியளித்துள்ளது


உலகம்

1.சூடானில் எதிர்க்கட்சியினருடன் ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

2.இந்திய கடற்படைக்கான அதிநவீன நடுத்தர ரக ஏவுகணை அமைப்பின் பராமரிப்பு மற்றும் இதர சேவைகளை வழங்குவது தொடர்பாக, இந்தியாவுடன் ரூ.344 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

3.இங்கிலாந்தின் தென் மேற்கு கடற்பகுதியில் கடல் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய ஜெல்லி மீனைக் கண்டுபிடித்துள்ளனர். இது உருவத்தில் மனிதனை விடவும் மிகப் பெரியதாகக் காணப்படுகிறது.


விளையாட்டு

1.டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்ற 2020 ஒலிம்பிக் வில்வித்தை தகுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய  வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.

3.வரும் 2022 கத்தார் உலகக் கோப்பை மற்றும் 2023 சீனா ஏஎப்சி கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா எளிதான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

4.இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், வீரர் ஸ்ரீகாந்தும் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)
  • தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
  • வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
  • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)

– தென்னகம்.காம் செய்தி குழு