Current Affairs – 18 July 2018
தமிழகம்
1.காவிரி நீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தைக் கலைக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
2.தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்தியா
1.நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று கூட இருக்கிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
2.பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைக் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்திலும் பலர் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
3.நாடாளுமன்ற மக்களவையின் பாஜக தலைமை கொறடாவாக அக்கட்சியின் எம்.பி.யான அனுராக் தாக்குர் நியமிக்கப்பட்டுள்ளார்.
4.ஹிமாசலப் பிரதேச ஆளுநராக ஹரியாணா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி செவ்வாய்க்கிழமை கூடுதல் பொறுப்பேற்றார்.
வர்த்தகம்
1.பொதுத் துறையைச் சேர்ந்த, சில வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.
2.இந்தாண்டு, ஜூன் வரை, 88 சிறிய, நடுத்தர நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 1,546 கோடி ரூபாய் திரட்டி சாதனை படைத்துள்ளன.
உலகம்
1.கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த நாட்டுக்கு ஆதரவாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருவது அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு அலையை எழுப்பியுள்ளது.
விளையாட்டு
1.ஜாகர்த்தா ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஹாங்காங் சீனாவை எதிர்கொள்கிறது.
2.இங்கிலாந்துக்கு எதிரான இறுதி மற்றும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.
இன்றைய தினம்
- உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)
- தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
- வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
- நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)
–தென்னகம்.காம் செய்தி குழு