Current Affairs – 18 January 2019
தமிழகம்
1.தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-இல் சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் வழியாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2.எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்தியா
1.ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (ஹெச்ஏஎல்) தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணையை செலுத்தி தாக்குதல் நடத்தும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
2.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளனர்.
வர்த்தகம்
1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் காலாண்டு லாபம் இந்த அளவிற்கு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை.
2.தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் லாபம் மூன்றாவது காலாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
3.இந்திய அகர்பத்திகள் இறக்குமதிக்கு விதித்த தடையை, இத்தாலி நீக்கியுள்ளது. இதனால், இத்தாலி உட்பட, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, அகர்பத்திகளை ஏற்றுமதி செய்ய வழி பிறந்துள்ளது.
உலகம்
1.அமெரிக்க நாடாளுமன்ற உளவுத்துறை மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி(45) நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
1.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றனர்.
2.இத்தாலி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ஏசி மிலனை வீழ்த்தி ஜுவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இன்றைய தினம்
- தாய்லாந்து ராணுவ தினம்
- லீமா நகரம் அமைக்கப்பட்டது(1535)
- எக்ஸ்ரே இயந்திரம் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1896)
- ஹாக்கி கழகத்துடன் நவீன ஹாக்கி போட்டிகள் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டன(1886)
– தென்னகம்.காம் செய்தி குழு