இந்தியா

1.கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒடிசா கடற்கரையில் இருந்து இந்த ஏவுகணை சோதனை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
2.நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டுகிற கருவியை பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச குழந்தைகள் திரைப்படத் திருவிழா ஜனவரி 19-ல் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.


இன்றைய தினம்

1.உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு