தமிழகம்

1.சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்ததை அடுத்து, மெட்ரோ ரயிலில் சராசரியாக தினசரி பயணிப்போர் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

2.இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக கருதப்படும் “வந்தே பாரத்’ தனது வர்த்தக சேவையை, தில்லியிலிருந்து வாராணசி வரையிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.


வர்த்தகம்

1.ரகசியமாக பராமரிக்க வேண்டிய அறிக்கையை, பகிரங்கமாக வெளியிட்டு, முதலீட்டாளர்களை திசை திருப்பிய விவகாரத்தில், யெஸ் பேங்க் மீது, ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


உலகம்

1.அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளார்.

2.ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் கடற்படைக்கு அதிபர் ஹசன் ரெளஹானி ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணித்தார்.


விளையாட்டு

1.தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார்.

2.கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சிமோனா ஹலேப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் எல்ஸி மெர்டென்ஸ்.


ன்றைய தினம்

  • காம்பியா விடுதலை தினம்(1965)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்(1836)
  • அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)
  • முதல் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது(1929)
  • முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது(1911)

– தென்னகம்.காம் செய்தி குழு