தமிழகம்

1.மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெறவுள்ளன.

2.செயற்கைக்கோள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய கருவியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினார்.


இந்தியா

1.செல்லிடப்பேசி மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் வகையில், ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

2.மகாராஷ்டிர மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ரூ.41,000 கோடி மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

3.ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள் எப்போது அச்சிடப்பட்டது என்ற தேதியை வெளியிட வேண்டும் என்று பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு அச்சிடும் நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டின், அக்டோபர் – டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என, எக்சிம் பேங்க் மதிப்பிட்டு உள்ளது.

2.நிறுவனர்களின் பங்கு மூலதனத்தை குறைப்பது தொடர்பான, ரிசர்வ் வங்கியின் உத்தரவை நிறுத்தக் கோரிய, கோட்டக் மகிந்திரா வங்கியின் மனுவை, மும்பை ஐகோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, கோட்டக் மகிந்திரா வங்கியில், இம்மாத இறுதிக்குள் நிறுவனர்களின் பங்கு மூலதனம், 20 சதவீதம்; 2020, மார்ச்சுக்குள், 15 சதவீதம்; அதன்பின், 10 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.


உலகம்

1.மாலத்தீவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, ரூ 10, 000 கோடி நிதியுதவி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிவித்தார். மேலும், இந்தியா-மாலத்தீவு இடையே நுழைவு இசைவு வழங்குவது உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

2.எமெனின் ஹோடைடா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வரும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல் 2019) கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது.


ன்றைய தினம்

  • சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
  • கத்தார் தேசிய தினம்
  • நைஜர் குடியரசு தினம்(1958)
  • நியூஜெர்ஸி,அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது(1787)
  • HTML 4.0 வெளியிடப்பட்டது(1997)
  • லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்(1987)
  • தென்னகம்.காம் செய்தி குழு