தமிழகம்

1.தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன்.இவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.எனவே நிதித் துறை செயலாளர் கே.சண்முகத்துக்கு தமிழக தலைமைச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.


உலகம்

1.சிலியில் நடந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரும், முன்னாள் அதிபருமான செபாஸ்டியன் பினேரா வெற்றி பெற்றுள்ளார்.
2.பிரான்சை சேர்ந்த பிரான்காயிஸ் கபார்ட் என்பவர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து புதிய சாதனை படைத்துள்ளார்.அவர் 42 நாட்கள், 16 மணி நேரம், 40 நிமிடம், 35 விநாடிகளில் உலைகை சுற்றி முடித்தார்.


விளையாட்டு

1.தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றுள்ளார்.
2.தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில், 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் சுஷில்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
3.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்நாயகன் விருதை ஷிகர் தவான் பெற்றார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் (International Migrants Day).
வேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு