தமிழகம்

1.தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தொடங்குகிறது.


இந்தியா

1.துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக கடல்சார் வாரியத்தை அமைக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

2.நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் கால் பதிக்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியின் இழப்பு முதல் காலாண்டில் ரூ.3,800 கோடியாக அதிகரித்துள்ளது.

2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 43,057 கோடி டாலர் (ரூ.30.13 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

3.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) முதல் காலாண்டு லாபம் 212 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.


உலகம்

1.இந்தியா-பூடான் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜொலித்த தீபா மாலிக் (48) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் கேல் ரத்னா விருது பெறவுள்ளார்.


ன்றைய தினம்

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)

– தென்னகம்.காம் செய்தி குழு