Current Affairs – 19 August 2018
தமிழகம்
1.இரண்டு லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 182 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது.
2.மழை-வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு மேலும் ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியா
1.கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
2.ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
3.கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தகம்
1.கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரையிலான இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2,514.8 கோடி டாலர் (சுமார் ரூ.1.70 லட்சம் கோடி) வீழ்ச்சியடைந்துள்ளது.
2.ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை முழுமையடைந்து விட்டதாக வால்மார்ட் அறிவித்தது.
3.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மூன்று மாத காலத்தில் கம்ப்யூட்டர் விற்பனை 28.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகம்
1.ஐ.நா. அமைப்பின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான், தனது 80 வயதில் காலமானார்.
கருப்பினத்தைச் சேர்ந்த முதல் ஐ.நா. பொதுச் செயலர் என்ற புகழ் பெற்ற கோஃபி அன்னான், உலக அரங்கில் தனது பணியினால் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.ஹஜ் யாத்திரையை ஒட்டி, 1. 28 லட்சத்துக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் சவூதி அரேபியா சென்றனர்.
3.பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் சனிக்கிழமை (ஆக. 18) பதவியேற்றுக்கொண்டார்.
விளையாட்டு
1.18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது.
முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச், சிமோனா ஹலேப் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.
இன்றைய தினம்
- உலக புகைப்பட தினம்
- சர்வதேச மனிதநேய தினம்
- ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
- கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
- ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)
- தென்னகம்.காம் செய்தி குழு