தமிழகம்

1.தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.

2.வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்தியா

1.தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

2.டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகில் மிகுந்த செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, சமூக ஆர்வலர்கள் அருந்ததி கட்ஜு மற்றும் மேனகா குருசாமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


வர்த்தகம்

1.கடும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.


உலகம்

1.பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிறிய விண்கற்களையும் கண்டறிவதற்கான எளிய மற்றும் புதுமையான முறையை அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய (நாசா) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறிவதைவிட, அவை வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு கண்டறியும் முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
இந்த முறை மூலம், பூமியை நோக்கி வரும் விண்கற்கள் சிறியதாக இருந்தாலும், எந்த நிறத்தைக் கொண்டதாக இருந்தாலும் அவற்றை எளிதில் கண்டறிய முடியும்

2.இந்தோனேஷிய பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அந்த நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, சர்வதேச தரவரிசையில் 65 கிலோ (ஃப்ரீஸ்டைல்) எடைப் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்தார்.


ன்றைய தினம்

  • உலக பாரம்பரிய தினம்
  • ஈரான் ராணுவ தினம்
  • ஜிம்பாப்வே விடுதலை தினம்(1980)
  • ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது(1949)

– தென்னகம்.காம் செய்தி குழு