உலகம்

1.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர் ஆவார்.


விளையாட்டு

1.நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம்(World Heritage Day).
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு