தமிழகம்

1.தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மின்சார வாகனங்கள் சார்ந்த உதிரி பாகங்களின் தயாரிப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.


இந்தியா

1.ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அரசின் நிதியுதவியுடன் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை பயில்வதற்கான திட்டத்தை தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

2.ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.


வர்த்தகம்

1.ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்கம், முந்தைய ஜூலை மாதத்தைப் போலவே மாற்றமின்றி 1.08 சதவீதம் என்ற அளவிலேயே இருந்ததாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது.நடப்பாண்டு ஜூலையில் 6.15 சதவீதமாக இருந்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7.67 சதவீதமாக உயர்ந்தது.

2.நூலிழை உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 5-8 சதவீதம் குறையும் என இந்தியா ரேட்டிங் அண்டு ரிசர்ச் (இன்ட்-ரா) நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் “மோடி நலமா’ (ஹெளடி மோடி) நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இணையவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் (டபிள்யுடிஏ) முதலிடத்தில் உள்ள ஆஷ்லி பர்டியை நெருங்கியுள்ளார் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா.

2.உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீரர் சஞ்சித் வெற்றி பெற்றார். அதே நேரம் துரியோதன் நேகி தோல்வியைத் தழுவினார்.

3.ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணியின் முன்னேறி உள்ளனர்.

4.தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார் தொடர்பாக 2 பயிற்சியாளர்கள் மற்றும் சில வீரர்கள் மீது பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவால் விசாரணை நடத்தப்படுகிறது.


ன்றைய தினம்

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
  • தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)
  • இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)
  • திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)

– தென்னகம்.காம் செய்தி குழு