Current Affairs – 17 September 2018
தமிழகம்
1.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2.சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதைக் கண்காணிக்க சி – விஜில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
2.பிரிட்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய முதல் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
3.நாட்டிலுள்ள 91 சதவீத காவல் நிலையங்கள், முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை தேசிய தரவுத் தள அமைப்பில் பதிவேற்றம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை இடதுசாரிகள் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
வர்த்தகம்
1.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 1.50 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலிக்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
2.உலகளவில், குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
3.2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.
உலகம்
1.பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
விளையாட்டு
1.செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடரை 0-4 என இந்திய அணி இழந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை உலக தகுதிச் சுற்று ஆட்டம் கிரால்ஜெவோவில் நடைபெற்று வந்தது.
இன்றைய தினம்
- மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)
- பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)
- தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
- தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம்(1953)
- திராவிடர் கழகத் தந்தை பெரியார் பிறந்த தினம்(1879)
- தென்னகம்.காம் செய்தி குழு