இந்தியா

1.பழங்குடியின மக்களின் கைவினை பொருட்களின் விற்பனையை உயர்த்த Friends Of Tribes எனும் ஆதாய அட்டையை ( Loyalty card ) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.இந்த ஆதாய அட்டையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடிகளில் 20% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் தலைவராக பனியாய்ற்றிய நவீன் குமார் ஆகஸ்ட் 29ல் ஓய்வு பெற்றுள்ளார்.இடைக்கால GSTN தலைவராக UIDAI அமைப்பின் (ஆதார்) தலைமை செயல் அதிகாரி A.B. பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
3.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வீரர்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றி 100 Things Every Professional Cricketer Must Know என்ற வழிகாட்டி நெறிமுறை புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
4.இந்திய இதயவியல் சங்கத்தின் ( Cardiological Society of India ) சார்பில், மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அவசரகால உதவிகள் செய்வதற்காக Heart Attack என்ற செயலியை வெளியிடப்பட்டுள்ளது.
5.பங்குச்சந்தைகள் செயல்படும் நேரத்தை அதிகரிப்பது பற்றிய பரிந்துரைகளை அளிக்க 19பேர் கொண்ட குழுவை செபி நியமனம் செய்துள்ளது.குழுவின் தலைவராக IIM அகமதாபாத் பேராசிரியர் ஜெயந்த் R. வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது பங்குச்சந்தைகள் காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை செயல்படுகின்றன.
6.சுகாதாரத்துறை சார்பில் காசநோயாளிகளை பரிசோதிக்க Universal Drug Sensitivity Test என்ற பரிசோதனை செப்டம்பர் 01 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7.Type 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தக்கூடிய கணையத்தை 3D தொழில்நுட்பத்தில் பேராசிரியர் பிமன் மண்டல் தலைமையிலான கவுகாத்தி IIT ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
8.இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வெளிநாட்டு வர்த்தகம் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஆன்லைன் சேவை வசதி Contact@DGFT யை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
9.ஜோர்டான் அரசு சஹாரா பாலைவனத்தில் கடல்நீரை பயன்படுத்தி விவசாய உற்பத்தி மற்றும் காடுகளை உருவாக்க Sahara Desert Project ஐ அறிமுகம் செய்துள்ளது.
10.பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் ( BPCL ) விரைவில் மகாரத்னா அந்தஸ்தை பெறவுள்ளது. BPCL தற்போது நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாக உள்ளது.இந்தியாவில் தற்போது 7 நிறுவனங்கள் மகாரத்னா அந்தஸ்து பெற்று உள்ளன. 01) BHEL, 02) COAL INDAIA , 03) GAIL INDIA , 04) IOC , 05) ONGC, 06) NTPC , 07) SAIL.


இன்றைய தினம்

1.1956 – ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.
2.1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
3.2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு