தமிழகம்

1.உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

2.காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வு மையத்தினர்  தெரிவித்தனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களைப் புதைக்கும் கல்திட்டை என்னும் ஈமச்சின்னம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

3.கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.


இந்தியா

1.அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இறுதித் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2.நவம்பா் மாதம் 3-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

3.புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) முடிவு செய்துள்ளது. பாடத்திட்டதை மறுஆய்வு செய்வற்கான குழு இந்த மாத இறுதியில் அமைக்கப்படவுள்ளது.


வர்த்தகம்

1.பிக்கி(FICCI – Federation of Indian Chambers of Commerce & Industry) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்று, புதிய முதலீடுகளை துவங்க தொழில் துறைக்கு அழைப்பு விடுத்த, சுப்ரமணியன், நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் வலுவாக இருப்பதாக தெரிவித்தார்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பணக் கடன்களை தீர்ப்பதில், பெரிய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

சிறு நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகை, 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. சிறு நிறுவனங்கள் பணப் புழக்கத்தை சார்ந்து இருப்பதால், பெரு நிறுவனங்கள் நிலுவைத் தொகைகளை உரிய நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் மிக முக்கியம். நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு முதலீடுகள் குறைவது, முக்கியமான காரணமாக இருக்கிறது.


உலகம்

1.‘அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்காக போட்டியிடுபவா்களிடையே 4-ஆம்கட்ட விவாதம் ஓஹியோ மாகாணம், வெஸ்டா்வில்லில் நடைபெற்றுள்ளது.

2.சிரியா குா்துகளுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலை துருக்கி நிராகரித்தது.

3.மக்கள் பட்டினியுடன் வாழும் நாடுகளின் பட்டியலில் நிகழாண்டில் இந்தியா 102-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 95-ஆவது இடத்தில் இருந்தது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் மொத்தம் 113 நாடுகளின் பட்டினி ஒழிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இந்தியா 83-ஆவது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டில் மொத்தமுள்ள 119 நாடுகளில் இந்தியா 103ஆவது இடத்தில் இருந்தது.

அயா்லாந்தைச் சோ்ந்த ‘கான்சொ்ன் வோ்ல்ட்வைட்’ அமைப்பும், ‘ஜொ்மனியின் வெல்ட் ஹங்கா் ஹில்ஃபே’ என்ற அமைப்பும் இணைந்து நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரித்துள்ளது.

4.கடந்த 1990-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இப்போது வறுமை பாதியாகக் குறைந்துவிட்டது; நாட்டின் பொருளாதாரம் கடந்த 15 ஆண்டுகளாக 7 சதவீதத்துக்கு மேல் வளா்ந்து வருகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஜாா்க்கண்டுக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையை படைத்தாா் மும்பை வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால்.

2.மலேசியாவின் ஜோஹா் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணி ஏற்கெனவே மலேசியா, நியூஸிலாந்தை வென்றிருந்தது. 3-ஆவது ஆட்டத்தில் ஜப்பானிடம் 3-4 என்ற கோல்கணக்கில் போராடி தோல்வியுற்றது.


ன்றைய தினம்

  • உலக வறுமை ஒழிப்பு தினம்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)

– தென்னகம்.காம் செய்தி குழு