தமிழகம்

1.விளையாட்டு வீரர் -வீராங்கனைகளுக்கு அரசுப் பணிகளில் வழங்கப்படும் உள்ஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

2.தமிழக காவல்துறையில் 39 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

3.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ரூ. 21 லட்சத்தில் சுவடிகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

5.சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தொடங்கி வைத்தார்.

6.அறிவியல் எழுத்தாளர் ராமதுரை (85)  சென்னையில்  காலமானார்.தமிழில் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் ராமதுரை 2009-ம் ஆண்டு சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்றவர்.

7.தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக, மூத்த வழக்குரைஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞராக நியமனப்பட்டுள்ளார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்மூலம், 4 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு வந்தது.
இறுதிக்கட்ட தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகவும் குறைந்தபட்சமாக 4.3 சதவீத வாக்குகள் பதிவானது.

2.அலாகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றும் திட்டத்துக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

3.நாட்டின் 100 மிகப் பெரிய வங்கி மோசடிகள் தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தயாரித்துள்ளது. அதனை ரிசர்வ் வங்கி, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ளது.

4.பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான புதிய வழிகாட்டுதலை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.


வர்த்தகம்

1.ஐசிஐசிஐ வங்கி தலைவர் பதவியில் சந்தீப் பக்ஷி மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

2.பொது சேமநல நிதி (ஜிபிஎஃப்) வட்டி விகிதத்தை மத்திய அரசு 8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.


உலகம்

1.ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு இம்மாதம் 18ம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது.

2.“பருவ நிலை மாற்றம் என்பது வெறும் வதந்தி’ என்ற தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாற்றிக் கொண்டுள்ளார்.

3.மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் தொடர்ந்துள்ள வழக்கில், ரகசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

4.வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு

1.டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில்  பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே  தோல்வியடைந்தார்.

2.யூத் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக தடகளத்தில் ஆடவர் 5000 மீ நடை ஓட்டத்தில் இந்திய வீரர் சூரஜ் பன்வர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


ன்றைய தினம்

  • உலக வறுமை ஒழிப்பு தினம்
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
  • தென்னகம்.காம் செய்தி குழு