தமிழகம்

1.தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. புயலால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2.2019-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் மூன்று வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது.

3.உலகின் மூன்றாவது பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரும் ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணருமான டி.எஸ்.கனகா (86) சென்னையில் புதன்கிழமை (நவ.14) காலமானார்.

4.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார்.

5.தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பின் நகல், பேரவைச் செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

2.பீமா கோரேகான் கலவர வழக்கு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பர் 3-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


வர்த்தகம்

1.ரிசர்வ் வங்கி, உபரி நிதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு, நிதிச் சந்தையில் புழக்கத்தில் விட்டு, மத்திய அரசுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.பிளிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான, ‘ஜபாங், மிந்த்ரா’ ஆகியவை ஒன்றிணைக்கப்படுகின்றன.

3.நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் -அக்டோபர் வரையிலான கால அளவில் 37.03 கோடி டன்னாக உயர்வைக் கண்டுள்ளது.


உலகம்

1.இன அழிப்பு வழக்கில் கம்போடிய முன்னாள் கமேர் ரூஜ் ஆட்சியாளர்களான நுவான் சேயா (92) மற்றும் கியேயு சம்பான் (87) ஆகியோரை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

2.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வற்கான மாநாடு, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.புகாரெஸ்டில் நடைபெற்று வரும் 23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தகுதி பெற்றுள்ளார்.

2.உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மனிஷாமெளன்  வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3.ஏடிபி பைனல்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்.

4.உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்ஷயா சென்னும், இரட்டையர் பிரிவில் இந்திய இணையும் தகுதி பெற்றுள்ளனர்.

5.அமெரிக்காவுடன் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து அணியில் தனது கடைசி ஆட்டத்துடன் விடை பெற்றார்  வேய்ன் ரூனி.


ன்றைய தினம்

  • சர்வதேச மாணவர் தினம்
  • எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  • புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  • டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
  • எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
  • தென்னகம்.காம் செய்தி குழு