Current Affairs – 17 May 2019
தமிழகம்
1.தமிழகத்தில் அனைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறைகளில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நல வாரியம் அமைக்கும்படி சட்டம், ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியா
1.மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரும் விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2.ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் 59 மக்களவைத் தொகுதிகளில், 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
வர்த்தகம்
1.சுந்தரம் ஹோண்டாவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்டி உள்ளது .
2.முருகப்பா குழுமத்தின் லாபம் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2,432 கோடியில் இருந்து ரூ.2,880 கோடியாக உயர்ந்துள்ளது. இது 18 சதவீதம் உயர்வு ஆகும்.
உலகம்
1.அமெரிக்க தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான அவசர நிலையை அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தகவல் தொடர்பு சாதனங்களை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
சீனாவின் ஹுவாவே நிறுவனத்துக்குத் தடை விதிக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2.உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம், புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விளையாட்டு
1.கோவையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான 36-ஆவது தேசிய இளையோர் கூடைப்பந்து போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டங்களில் ஆந்திரம், ஹரியாணா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
2.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ரவுண்டு 16 சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
இன்றைய தினம்
- உலக தொலைத் தொடர்பு தினம்
- அர்ஜெண்டினா ராணுவ தினம்
- நார்வே அரசியல் நிர்ணய தினம்
- நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)
- வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)
– தென்னகம்.காம் செய்தி குழு