Current Affairs – 17 May 2018
தமிழகம்
1.பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.4 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
2.8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்தியா
1.எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து.
2.2028-ஆம் ஆண்டு தலைநகர் தில்லி, உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரமாக இருக்கும் என்று ஐ.நா. ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.அன்னிய முதலீட்டாளர்கள், ‘பார்டிசிபேட்டரி நோட்’ வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஏப்ரலில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2.மார்ச் வரையிலான காலாண்டில், 20 வங்கிகளின் வாராக் கடன், 32 சதவீதம் அதிகரித்து, 3.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உலகம்
1.அமெரிக்காவைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாடிமாலாவும்(Guatemala), ஜெருசலேமில் தூதரகத்தை திறந்துள்ளது.
விளையாட்டு
1.இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
- உலக தொலைத் தொடர்பு தினம்
- அர்ஜெண்டினா ராணுவ தினம்
- நார்வே அரசியல் நிர்ணய தினம்
- நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)
- வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)
–தென்னகம்.காம் செய்தி குழு