தமிழகம்

1.தூத்துக்குடி வஉசி துறைமுகம் நிகழாண்டில் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.


இந்தியா

1.தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை கெளரவித்தார்.

2.கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.


வர்த்தகம்

1.இரு தரப்பு வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகளை பேசி தீர்க்கலாம் என, இந்தியாவுக்கு, அமெரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.


உலகம்

1.இந்தியாவுடன் இணைந்து வானிலிருந்து செலுத்தக்கூடிய சிறிய வகை ஆளில்லா விமானம், இலகுரக ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் எதிர்ப்பையும் மீறி புதிய கிளப் உலகக் கோப்பை போட்டியை நடத்த பிஃபா கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


ன்றைய தினம்

  • இத்தாலிய பேரரசு அமைக்கப்பட்டது(1861)
  • ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)
  • ரவுலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்ய மகாத்மா காந்தி சென்னை வந்தார்(1919)
  • கலிபோர்னியம் என்ற 98வது தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1950)
  • அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)

– தென்னகம்.காம் செய்தி குழு