Current Affairs – 17 June 2019
தமிழகம்
1.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியா
1.17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர், ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறும். மக்களவைக்கு புதிய தலைவர் 19-ஆம் தேதி தேர்வு செய்யப்பட
இருக்கிறார்.
2.2018ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நன்கொடைதாரர்களால் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.மே மாதத்தின், வர்த்தக பற்றாக்குறை, 15.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஏற்பட்ட அதிகபட்ச உயர்வாகும்.
உலகம்
1.ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள நிலையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
2.மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில், அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
விளையாட்டு
1.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா.
2.உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
3.எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
4.நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இன்றைய தினம்
- சர்வதேச சந்தையர் தினம்
- ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)
- இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
- இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)
- சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)
– தென்னகம்.காம் செய்தி குழு