தமிழகம்

1.ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2.முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக 5 பேர் கொண்ட மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர்.


இந்தியா

1.நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

2.பெங்களூரில் 13-ஆவது உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு  தொடங்கியது.

3.வழக்குத் தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினாலும், அது செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1. 30அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்த இந்தியா முடிவெடுத்துள்ளது.

2.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை ஊக்குவிக்க தேசிய உள்நாட்டு கவுன்சிலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


உலகம்

1. யேமனின் முக்கிய துறைமுக நகரமான ஹோடைடாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை  கைப்பற்றியது.

2.அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்துள்ளது.


விளையாட்டு

1. கால்பந்து உலகக் கோப்பையில்பெருவை 1-0 என வீழ்த்தியது டென்மார்க்.ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் டி பிரிவு ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

2.உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் முறை பிரான்ஸ்-ஆஸி. அணி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.


ன்றைய தினம்

  • சர்வதேச சந்தையர் தினம்
  • ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)
  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)
  • சுதந்திரதேவி சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)

–தென்னகம்.காம் செய்தி குழு