Current Affairs – 17 July 2019
தமிழகம்
1.இசை, நடனம் மற்றும் நாடகத்துக்கான தேசிய அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு கூட்டம், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைத்துறை வித்தகர்களான ஜாகிர் ஹுசேன், சோனால் மான்சிங், ஜதின் கோஸ்வாமி மற்றும் கே.கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகிய நான்கு பேர் சங்கீத நாடக அகாடமியின் ஃபெலோஷிப் (அகாடமி ரத்னா) பெறுவதற்கு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
2.வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம்’ இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்தார்.
3.பொது போக்குவரத்தின் அளவு குறைந்ததால் தமிழகத்தில் 1,412 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
4.தமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2.33 கோடியாக உயர்ந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2017-18) 2.15 கோடியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
1.அஸ்ஸாமில் அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயங்களின் மூலம் கடந்த மார்ச் மாதம் வரை 1.17 லட்சம் பேர் வெளிநாட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.கடந்த 5 ஆண்டுகளில் 14,800-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓ) உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்தார்.
3.வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டைவிட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
வர்த்தகம்
1.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 2018-19 நிதியாண்டில் சுமார் ரூ.38,000 கோடிக்கு வரி மோசடியில் ஈடுபட்டவர்களை வரி வசூலிப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை ஜூன் மாதத்தில் 4.6 சதவீதம் குறைந்துள்ளதாக மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
உலகம்
1.பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்எல்லையில் பறப்பதற்கு விதித்திருந்த தடையை சுமார் நான்கரை மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
2.இந்தியாவில் 41,331 பாகிஸ்தானியர்களும், 4,193 ஆப்கானிஸ்தானியர்களும் வசிக்கின்றனர் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அந்த நாடுகளைச் சேர்ந்த மத சிறுபான்மையினராவர்.
3.கடந்த 8 ஆண்டுகளில் ஹெச்ஐவி வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.ஜெர்மனியின் சூல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜயவீர், ராஜ்கன்வர் சிங், ஆதர்ஷ் சிங் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனர். இது விஜயவீர்வெல்லும் 3-ஆவது தங்கமாகும். ஆத்ர்ஷுக்கு இது 2-ஆவது தங்கமாகும்.
மேலும் 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில் ஹஸாரிகா, யஷ்வர்த்தன், பார்த்தி மகிஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி 1877.4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. 7 தங்கம் உள்பட மொத்தம் 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இன்றைய தினம்
- சர்வதேச நீதி தினம்
- தென்கொரியா அரசியலமைப்பு தினம்
- கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
- கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)
– தென்னகம்.காம் செய்தி குழு