தமிழகம்

1.உலக அளவில் முதன்முறையாக ரிமோட் மூலம் இயக்கக்கூடிய மின்னணு பகுப்பாய்வு நுண்நோக்கி (லீப்) சென்னை ஐஐடி-யில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 7 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 40 கோடி செலவில் சென்னை ஐஐடி இந்த வசதியை உருவாக்கியுள்ளது. உலோகங்களிருந்து அணுக்களைப் பிரித்தெடுக்கவும், அணு அளவீடுகளில் இருந்து ஒரு உலோகத்தை வடிவமைக்கவும் இந்த உயர் தொழில்நுட்ப நுண்நோக்கி உதவுகிறது.

2.ஹங்கேரியில்நியூக்ளியர் கிட்ஸ்’ என்ற பெயரில் நடைபெறவுள்ள சர்வதேச இசை நிகழ்ச்சியில் பங்கேற்க கூடங்குளம் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

3.ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை ரத்து செய்வது குறித்த அரசாணை மூன்று நாள்களுக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

4.ஆண்டுதோறும் டெல்டா பாசனத்துக்காகத் திறக்கப்படும் மேட்டூர் அணையானது 85-ஆவது முறையாக வியாழக்கிழமை (ஜூலை 19) திறக்கப்படுகிறது.


இந்தியா

1.பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில்  வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

2.துப்பாக்கி உரிமம் பெறுபவர்களுக்கான தேசிய அளவிலான பட்டியல் ஒன்றைத் தயார்செய்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ஒவ்வொருவருக்கும் தனி அடையாள எண் வழங்க உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3.மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி)  செயலி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளைக் கொண்ட வகையில் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2019ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) கணித்துள்ளது.

2.மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 4 ஆண்டுகள் காணாத அளவாக 5.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

3.ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு எல்ஐசி-யின் நிர்வாக குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

4.நாட்­டின் தங்­கம் இறக்­கு­மதி, நடப்பு 2018 – 19ம் நிதி­யாண்­டின், ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், 25 சத­வீ­தம் குறைந்து, 840 கோடி டால­ராக சரி­வ­டைந்­துள்­ளது.


உலகம்

1.சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா-ரஷியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

2.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


விளையாட்டு

1.கன்னியாகுமரியில் 3 நாள்கள் நடைபெற்ற தெற்காசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் இந்திய அணி 177 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.

2.விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றதின் எதிரொலியாக நோவக் ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச நீதி தினம்
  • தென்கொரியா அரசியலமைப்பு தினம்
  • கலிபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் ஆரம்ப நிகழ்வுகள் டிவி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
  • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது(1976)

–தென்னகம்.காம் செய்தி குழு