தமிழகம்

1.தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

2.கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

2.சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், 49 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.
2019ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது.

3.காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரதேச தலைவராக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

4.உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

5.கடந்த 2015 முதலான 3 ஆண்டுகளுக்கு, அமைதிக்கான காந்தி விருதை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. இதில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, கன்னியாகுமரியைச் சேர்ந்த விவேகானந்த கேந்திரத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான காந்தி விருது கடைசியாக 2014-ஆம் ஆண்டு இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு அந்த விருது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த விருது புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஜனவரி மாதம் 31-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.மின்னணு முறையில் (இ-ஃபைலிங்) வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை மேலும் மேம்படுத்த இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. ரூ.4,242 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.


உலகம்

1.பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

2.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் குகேஷ் உலகின் இரண்டாம் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பிரக்கியானந்தாவின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

2.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மரின் சிலிக், மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறியுள்ளனர்.

3.மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபல்லி காஷ்யப், சாய்னா நேவால் ஆகியோர் தத்தமது ஆட்டங்களில் வென்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.

4.டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

5.ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தோல்வி எதிரொலியாக தனது பதவியை ராஜிநாமா செய்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.

6.கேலோ இந்தியா யூத் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப் பதக்கம் வென்றார்.
மத்திய விளையாட்டு அமைச்சகம்,சாய் சார்பில் புனேயில் கேலோ இந்தியா யூத் போட்டிகள் 2019 நடைபெற்று வருகின்றன.


ன்றைய தினம்

  • மொனாகா தேசிய தினம்
  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(1917)
  • வளைகுடாப் போர் துவங்கியது(1991)
  • ஐ.நா., சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது(1946)

– தென்னகம்.காம் செய்தி குழு