இந்தியா

1.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவார்.இந்தியா – இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2.ஜூலை 1, 2018 முதல் ஆதாரில் முக அடையாளத்தையும் சரிபார்க்கும் தெரிவை ஆதார் ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்த தினம் (Benjamin Franklin Birth Anniversary Day).
பெஞ்சமின் பிராங்க்ளின் 1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தார். மின்னலில்கூட மின்சாரம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். மின்சாரம், இடி, மின்னல் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் (Bifocal Glasses) கண்டுபிடித்தார். அமெரிக்காச் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் பெஞ்சமின் ஆவார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு