Current Affairs – 17 February 2019
தமிழகம்
1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம், வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திங்கள்கிழமை (பிப்ரவரி 18) அளிக்கவுள்ளது.
2.தமிழகத்தில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்து வந்த ஜெ.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா
1.வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காகிதப் பயன்பாடின்றி இணையதளத்தின் மூலம் இணைக்கப்படும் என அந்த மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
வர்த்தகம்
1.இந்திய நிறுவனங்கள் தங்களது வர்த்தக தேவைகளுக்காக நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீட்டை மேற்கொண்டு ரூ.4.57 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,812 கோடி டாலராக (ரூ.27.86 லட்சம் கோடி) சரிந்துள்ளது.
உலகம்
1.நைஜீரியாவில் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அதிபர் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் தொடங்க சில மணிநேரம் இருக்கும்போது திடீரென ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
விளையாட்டு
1.பல்கேரிய சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவு 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸரீன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2.தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் வர்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
3.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய நடைஓட்ட சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் கே.டி.இர்ஃபானும், மகளிர் பிரிவில் செளமியாவும் பட்டம் வென்றனர்.
இன்றைய தினம்
- கொசோவா விடுதலையை அறிவித்தது(2008)
- விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)
- சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது(1867)
- நியூஸ் வீக், முதலாவது இதழ் வெளிவந்தது(1933)
- மக்கள் சீன குடியரசுக்கும், வியட்நாமுக்கும் இடையே போர் ஆரம்பமானது(1979)
– தென்னகம்.காம் செய்தி குழு