இந்தியா

1.காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தண்ணீர் அளவை விட குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் ஆபரேசன் எதுவுமின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை படைத்துள்ளார்..தாய்ப்பால் தரும் திருநங்கையின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கு 35 வயது ஆகிறது. உடலகிலேயே தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.இந்த போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.
2.தென் ஆப்ரிக்க அணியுடனான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கோஹ்லி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் (6 போட்டியில் 558 ரன்) விருது பெற்றார்.
3.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.முன்பு 2013-14ல் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார். முன்னதாக இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது கோலி இரண்டு கேட்ச்கள் பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பிடிக்கும் 100வது கேட்ச் ஆகும். ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மகிலா ஜெயவர்தனே 218 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160 கேட்ச்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156 கேட்ச்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
4.தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச் பிடித்து உள்ளார்.இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இதில் 600 கேட்ச்களும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும்.இதே போல 3-வது ஒருநாள் போட்டியில், 50 ஓவர் போட்டிகள் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
2.2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு