தமிழகம்

1.அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.


இந்தியா

1.மத்தியப் பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பகேல் ஆகியோர் இன்று பதவியேற்கின்றனர்.

2.தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.ஜி.எஸ்.டி.,க்கு பின், தொடர்ந்து சரிவடைந்து வந்த நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.


உலகம்

1.இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2.கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளுக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி “ஷூட் அவுட்’ முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெல்ஜியம் அணி உலகக் கோப்பை வெல்வது இது முதல் முறையாகும்.

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

2.சீனாவில் நடைபெற்ற உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து  தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


ன்றைய தினம்

  • பூட்டான் தேசிய தினம்
  • கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது(1961)
  • அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது(1834)
  • பிரேசிலில் 25 ஆண்டுகளுக்கு பின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது(1989)
  • தென்னகம்.காம் செய்தி குழு