இந்தியா

1.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
2.உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உலகம்

1.சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.புனேவில் நடைபெற்ற ஐ.டி.எப். மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் பிரிட்டனின் கேட்டி டியூனை வீழ்த்தி ஸ்பெயினின் ஜார்ஜினா கார்சியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று முதல் விமானத்தில் ரைட் சகோதர்கள் (Ist Flight Wright Brothers).
ரைட் சகோதர்கள் என்றழைக்கப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்கிற இருவரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களே விமானத்தைக் கண்டுபிடித்த முன்னோடிகள். முதன்முதலில் டிசம்பர் 17 அன்று 1903ஆம் ஆண்டில் பூமிக்கு மேலே மணிக்கு 30 மைல் வேகத்தில் 12 வினாடிகளில் 120 அடி தூரம் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர்.
2.இன்று பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் (International Day to End Violence Against Sex Workers).
அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்காக டாக்டர் அன்னி தெளி மற்றும் பாலியல் தொழிலாளி அவுட் ரீச் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலாளருக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டில் இத்தினத்தை அமெரிக்காவில் கடைப்பிடித்தனர். மேலும் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சின்னமாக சிவப்பு குடை அறிவிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு