தமிழகம்

1.தமிழக காவல்துறையில் 12 ஏடிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

2.எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

3.ஆவணப்பதிவு முடிந்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் மென்பொருள் விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.


இந்தியா

1.அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

2.கொலீஜியம் பரிந்துரைத்தபடி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அகில் ஏ.குரேஷியை நியமிப்பது தொடர்பாக, மத்திய அரசு ஒருவாரத்தில் கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் தீரேந்திர ஓஜாவின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மின்னணு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை வரும் திங்கள்கிழமை (ஆக.19) சந்தித்துப் பேசவுள்ளார்.


உலகம்

1.இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜான் சலீவனுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.வரும் 2027-ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

3.லென்ஸ் மற்றும் இயங்கும் பாகங்கள் இல்லாத, மிக நுண்ணிய உள்நோக்கியை (எண்டோஸ்கோப்) ஜெர்மனியைச் சேர்ந்த டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.லென்ஸ், மின்னணு மற்றும் பொறியியல் பாகங்கள் ஏதுமில்லாத அந்த உள்நோக்கி, ஃபைபர் இழையால் ஆனது.
ஒரு ஊசிமுனை தடிமனே இருக்கும் இந்த உள்நோக்கி, மருத்துவத் துறையின் பல்வேறு ஆய்வுகளுக்காக மனித உடலில் எளிதாக செலுத்திப் பயன்படுத்த முடியும். ஓர் உயிரணுவை விட நுணுக்கமான பொருள்களையும் மிகத் தெளிவாக முப்பரிமாணப் படமெடுக்கும் அளவுக்கு இந்த உள்நோக்கி துல்லியம் வாய்ந்தது ஆகும்.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.இந்திய மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா நாட்டின் உயர்ந்தபட்ச விளையாட்டு விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  • காபோன் விடுதலை தினம்(1960)
  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)

– தென்னகம்.காம் செய்தி குழு