தமிழகம்

1.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2.வாகன ஓட்டிகள், வாகனத்துக்கான ஆவணங்களை எண்ம பெட்டக முறை எனப்படும் டிஜிலாக்கர் (Digilocker) அல்லது எம்-பரிவாஹன் (mparivahan) செல்லிடப்பேசி செயலி மூலம் காண்பித்தால் போலீஸார் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.பாஜக மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சாராது பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்த முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவரும், அரசியல்வாதியாக மட்டும் அல்லாது பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
2.அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் கண்காணிப்பையும் மீறி, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் கடந்த 1998ஆம் ஆண்டில் அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
3.மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வாஜ்பாய் பிறந்தார். அவரது தந்தையின் பெயர், கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய், தாயாரின் பெயர் கிருஷ்ணா தேவி ஆகும்.
4.47 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கையில், மக்களவைக்கு 10 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமராக கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலும் 3 முறை பதவி வகித்துள்ளார்.
5.1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலும் 3 முறை பதவி வகித்துள்ளார்.இதில் முதல்முறை கடந்த 1996ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், 13 நாளில் ராஜிநாமா செய்தார். இதையடுத்து 1998ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், 13 மாதங்கள் அப்பதவியை வகித்தார். மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அவரது அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்பின்னர், 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தார். இதன்மூலம், 5 ஆண்டுகால ஆட்சியையும் பூர்த்தி செய்த காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் என்று வாஜ்பாய் பாராட்டப்பட்டார்.
6.இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி பேருந்து சேவையை 1999ஆம் ஆண்டு தொடங்கி வைத்து, அதன் முதல் பேருந்தில் லாகூருக்கு பயணம் செய்தார். பாகிஸ்தானில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபையும் சந்தித்துப் பேசினார்.
7.வாஜ்பாயின் இறுதிச் சடங்கு தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
8.தில்லி பனிக்காலத்தில் ஏற்படும் காற்று மாசுக்கு வெளிவிவகாரங்களே 64 சதவீதம் காரணம் என்றும் வெளிநாடுகளிலிருந்து தில்லிக்கு 13 சதவீதம் மாசு வருகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், காற்று மாசுவைத் தடுக்க அரசுகள் மேற்கொண்டாலும் மாசு அதிகரித்து கொண்டேதான் செல்கிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வை எரிசக்தி, வளங்கள் நிறுவனமும் (டெரி), இந்திய வாகன ஆய்வு சங்கமும் (அரெய்) இணைந்து நடத்தின.


உலகம்

1.சுதந்திரதினத்தையொட்டி நேபாளத்துக்கு இந்தியா சார்பில் 30 ஆம்புலன்ஸ், 6 பேருந்துகளை அங்குள்ள மருத்துவமனை, அறக்கட்டளை அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


ன்றைய தினம்

  • காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.(1960)
  • தென்னகம்.காம் செய்தி குழு