Current Affairs – 18 August 2018
தமிழகம்
1.தமிழக காவல் துறையில் க்யூ பிரிவை வலுவூட்டும் வகையில் புதிதாக 146 காவலர்களை நியமனம் செய்து சட்டம் -ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2.புதிய தலைமைச் செயலக முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் பதவியை நீதிபதி ரகுபதி ராஜிநாமா செய்துள்ளார்.
இந்தியா
1.பாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டி தகனம் செய்யப்பட்டது.
அவரது சிதைக்கு வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா தீ மூட்டினார்.
2.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 10.08 சதவீதமாக உயர்ந்ததாக மத்திய புள்ளியியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விகிதமானது தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு எட்டப்பட்ட உச்ச அளவு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.இந்திய அஞ்சல்துறை சார்பில் பேமெண்ட் வங்கி அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, 21-ஆம் தேதி தொடங்கி வைப்பார் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.மத்திய அரசு, உணவு பொட்டல கொள்கையை மறுபரிசீலனை செய்ய, வல்லுனர் குழுவை அமைத்துள்ளது.
2.கடந்த, 2017 -– 18ம் வரி மதிப்பீட்டு ஆண்டில், நாட்டின் வருமான வரி வசூல், 10.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானை அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுத்தது.
விளையாட்டு
1.ஜகார்த்தாவில் 18-ஆவது ஆசியப் போட்டிகள் தொடங்குகின்றன.
வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் 58 விளையாட்டுகளில் பதக்கங்களை கைப்பற்ற உள்ளனர்.
2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிமோனா ஹலேப், டெல் பொட்ரோ ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
3.ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2018 நடத்தும் உரிமையை ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு வழங்கியது பிசிசிஐ.
இன்றைய தினம்
- தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
- லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
- செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
- தென்னகம்.காம் செய்தி குழு