Current Affairs – 17 April 2019
தமிழகம்
1.தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா
1.மக்களவைத் தேர்தலில் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
2.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலாகோட் வரையிலும் கடந்த 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் வாகனப் போக்குவரத்து மற்றும் எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.
வர்த்தகம்
1.விமான கட்டணம் உயர்ந்து வருவதற்கு, விமான நிறுவனங்களுடன் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.
2.தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பெங்களூரைச் சேர்ந்த விப்ரோ நான்காம் காலாண்டில் ரூ.2,493.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
உலகம்
1.ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான “புலிட்ஸர்’ விருது நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள, 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தேவாலயத்தின் பெரும்பாலான கூரைப் பகுதியும், புகழ்பெற்ற அதன் கூம்பு வடிவ கோபுரமும் சேதமடைந்தன.
விளையாட்டு
1.2கோல்ப் விளையாட்டின் வீரராக திகழும் டைகர் உட்ஸ், 15-ஆவது முக்கிய தொடரில் 5-ஆவது மாஸ்டர்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவின் உயரிய சுதந்திரத்துக்கான அதிபர் விருது வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம்
- சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்(1756)
- இந்திய முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இறந்த தினம்(1975)
- அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறந்த தினம்(1790)
- வங்கதேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1971)
– தென்னகம்.காம் செய்தி குழு