இந்தியா

1.தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் குகைக்கோவில் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முற்றிலுமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
2.ஐதராபாத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன், ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ளான்.இந்த மலைச்சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் பெயரில் 1912-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம் மற்றும் இசையமைப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்காக விருதுகள் வழங்கப்படுகிறது.ராய்சேல் காட்ஸி கான்ஷா, ஜான் ஹெல்பெர்ன், மிச்சேல் ஸ்லோன் ஆகிய ஊடகவியலாளர்களும் விருதுகளை வென்றுள்ளனர். ஆண்ட்டூ சீன் கீர் என்பவர் எழுதிய லெஸ் என்ற புத்தகம் பிக்சன் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது. வரலாற்று பிரிவில் விருதை ஜாக் டேவிஸ் எழுதிய தி கல்ப்: மேக்கிங் ஆப் அன் அமெரிக்கன் சீ என்ற புத்தகமும், வாழ்க்கை வரலாறு பிரிவில் கரோலின் ப்ராசெர் எழுதிய ப்ராய்ரி பயர்: தி அமெரிக்கன் ட்ரீம்ஸ் ஆப் லாவ்ரா என்ற புத்தகமும், கவிதை பிரிவில் ப்ராங் பிதார்ட் எழுதிய ஹால்ப் லைட் என்ற புத்தகமும் விருதுகளை வென்றுள்ளன.மார்டைனா மஜோக் என்பவர் இயற்றிய காஸ்ட் ஆப் லிவிங் என்ற நாடகமும், கெண்ட்ரிக் லாமர் இயற்றிய டாம்ன் என்ற ஆல்பம் சிறந்த பாடல் விருதை வென்றுள்ளது.
2.காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளவரசர் ஹாரி இளம் தூதராக நியமிக்கப்படுவதாக பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்துள்ளார்.


ன்றைய தினம்

1.இன்று உலக ஹீமோபீலியா தினம்(World Hemophilia Day) .
மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீமோபீலியா நோய் உண்டாகிறது. அதாவது எக்ஸ் குரோமோசோம் பாதிக்கப்படும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்க்கு காயம் ஏற்பட்டால் இரத்தக்கசிவு இருந்துகொண்டே இருக்கும். இரத்தம் உறையாது. இந்த நோய் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு