தமிழகம்

1.தமிழகத்தில் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அஞ்சலி சிங் வெளிநாட்டு தூதரகப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கமாக இப்பணிக்கு ஆண் அதிகாரிகள்தான் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போதுதான் முதல்முறையாக இப்பொறுப்புக்கு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுவதாலும் கரூரில் ஜவுளி ஏற்றுமதி 30 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.


உலகம்

1.சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய் ஆலைகளில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக, அந்த ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.இதையடுத்து, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனத்தின் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது.

2.மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்துக்கான(எம்ஏபி)2019 இளைஞர்கள் கருத்தரங்கு சீனாவின் ஜிலின் மாநிலத்தில் 15ஆம் தேதி துவங்கியது. 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 270 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் என்பது யுனெஸ்கோ அமைப்பால் 1971ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான திட்டமாகும்.


விளையாட்டு

1.உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் கவிந்தர் சிங் பிஷ்ட் போராடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

2.ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் 22-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி.


ன்றைய தினம்

  • மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது(1852)
  • மெக்சிகோ விடுதலை தினம்(1810)
  • மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)
  • உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

– தென்னகம்.காம் செய்தி குழு