இந்தியா

1.ஆசிரியர் தினத்தன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த Prakriti Khoj என்ற இணையவலை வினாடி – வினாவை துவக்கியுள்ளது.
2.மியான்மரில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு அகதிகளாக புலம் பெயர்ந்துள்ள ரோஹிங்கியா சிறார்களுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் அடையாள அட்டை வழங்கியுள்ளது.
3.தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான First National Canine Seminar, குருகிராமில் நடைபெற்றுள்ளது.இந்த கருத்தரங்கை கருப்பு பூனைப்படைகள் எனப்படும் NSG அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் — Canine as Tactical Weapon in Fight against Terrorism ஆகும்.
4.லட்சத்தீவில் அமைந்துள்ள ஆளில்லா தீவுகளில் ஒன்றான பரலி ஐ தீவு, கடல் அரிப்பினால் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தீவுகள் அழியும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
5.அஸ்ஸாம் மாநிலத்தின் 26,000 கிராமங்கள் மற்றும் 1500 தேயிலை தோட்டங்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்த அம்மாநில அரசு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
6.வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம், உணவு, கைவினைப்பொருட்கள், சுற்றுலா மற்றும் பாரம்பரியம் ஆகியற்றை எடுத்துகூறும் வகையில் North East Calling என்ற கலாச்சார திருவிழா புது டெல்லியில் நடத்தப்பட்டுள்ளது.
7.பழங்குடியின மக்களின் கைவினை பொருட்களின் விற்பனையை உயர்த்த Friends Of Tribes எனும் ஆதாய அட்டையை ( Loyalty card ) மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.இந்த ஆதாய அட்டையை பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடிகளில் 20% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


விளையாட்டு

1.அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் கேரம் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் தேஜஸ்வி டுடுகா ( Tejasvi Duduka ) பட்டம் வென்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத்தின் வெமூரி அனில் குமார் இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
2.மலேசியன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து, தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான முகம்மது சயபிக் கமலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.ஹரிந்தர் பால் சந்து இந்த ஆண்டில் வெல்லும் ஐந்தாவது பட்டமாகும் இது.இவர் இதுவரை மொத்தம் பத்து பட்டங்களை வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக ஓசோன் தினம் (World Ozone Day).
பூமியை கவசமாக இருந்து பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் க்ளோரோ புளோரோ கார்பன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் மாண்ட்ரியல் ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டில் உருவானது. இதனை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. 1995ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு