Current Affairs – 16 October 2019
தமிழகம்
1.தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 12-ஆவது பட்டமளிப்பு விழா அக்டோபா் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2.தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராக, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
3.அரவக்குறிச்சி அருகே சுமாா் 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.விமானத்தின் எரிபொருளை சேமிக்கும் நோக்கில், ‘டேக்ஸிபாட்’ சேவையை ஏா் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2.நாட்டிலுள்ள 25 உயா்நீதிமன்றங்களில் 420 நீதிபதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
1.நாட்டின் ஏற்றுமதி, கடந்த செப்டம்பர் மாதத்தில், 6.57 சதவீதம் அளவுக்கு குறைந்து, 26 பில்லியன் டாலராக, அதாவது, இந்திய மதிப்பில், 1.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
2.தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், ஆறு மாதங்களில், 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வணிக வரி வசூல் நடைபெற்றுள்ளது.
3.விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.15,875.4 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.15,203.2 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.
நிகர லாபம் ரூ.1,889 கோடியிலிருந்து 35 சதவீதம் உயா்ந்து ரூ.2,552 கோடியானது.
உலகம்
1.‘பிட்காயின்’ போன்ற தனது ‘லிப்ரா’(Libra) மெய்நிகா் நாணயத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளது.
2.ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின் சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். கடந்த 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
1.பிஃபா 2020 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இந்தியா-வங்கதேச அணிகள் இடையே நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.
2.டென்மாா்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு உலக சாம்பியன் பி.வி.சிந்து, ஆடவா் பிரிவில் சாய் பிரணீத் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
இன்றைய தினம்
- சர்வதேச உணவு தினம்
- சிலி ஆசிரியர் தினம்
- பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
- வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
- பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)
– தென்னகம்.காம் செய்தி குழு