தமிழகம்

1.வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இதுவரை 11.91 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்தார்.

2.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்தது.

3.வரும் டிசம்பர் மாதத்துக்குள் 672 அரசுப் பள்ளிகளில் “அடல் அறிவியல் ஆய்வகங்கள்’ அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

4.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 70,59,982 மாணவா்களுக்கு ‘ஸ்மாா்ட் அட்டை’ வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பெறுவதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

2.இந்திய வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடா தொடர்பான தரவுகளை இந்தியாவில் உள்ள சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களுங்கு விதித்திருந்த கெடுவை(அக்.15) நீட்டிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில், 1,398 கோடி டாலராக குறைந்துள்ளது.இது, ஆகஸ்டில், 1,739 கோடி டாலராக இருந்தது.

2.நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பரில் 5.13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

3.தேசிய அஞ்சல் துறை, மின் சிக்கனத்திற்கான, எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகள், மின்விசிறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் களமிறங்கியுள்ளது.


உலகம்

1.இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கு இடையேயான சந்திப்பு நவம்பரில் நிகழும் என இந்தியாவுக்கான சீன தூதர் லுயோ ஜாவோஹுய் தெரிவித்துள்ளார்.

2.செய்தியாளர் ஜமால் கஷோகி மர்மமான முறையில் மாயமான விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

3.தொழில்நுட்ப வல்லுனரும், மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரும், வல்கனின் நிறுவனரான பால் ஆலன், லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் காலமானார். அவரின் வயது 65.


விளையாட்டு

1.யூத் ஒலிம்பிக் போட்டி ஹாக்கி 5 ஆட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கங்களை வென்றன.

2.ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி நெருங்கி வருகிறார் நோவக் ஜோகோவிச்.ரபேல் நடால் 7660 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.நடாலை காட்டிலும் 215 புள்ளிகள் மட்டுமே ஜோகோவிச் பின் தங்கி உள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச உணவு தினம்
  • சிலி ஆசிரியர் தினம்
  • பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
  • வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
  • பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)
  • தென்னகம்.காம் செய்தி குழு