தமிழகம்

1.தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நவம்பர் 30-ஆம் தேதி சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் நடைபெற உள்ளது.

2.முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் முழு உருவச் வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


இந்தியா

1.மிஸோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

2.இந்தியாவில் பெட்ரோல்-டீசல் தேவை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 சதவீதம் அதிகரித்திருந்தது.

3.மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்குள்ள 230 தொகுதிகளில் மொத்தம் 2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


வர்த்தகம்

1.இந்தியாவின் ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதத்தில் 17.86 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவின் ஏற்றுமதி நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் 2,698 கோடி டாலராக (ரூ.1.89 லட்சம் கோடி) இருந்தது. ஏற்றுமதியைப் போலவே நாட்டின் இறக்குமதியும் 17.62 சதவீதம் உயர்ந்து 4,411 கோடி டாலரை (ரூ.3.08 லட்சம் கோடி) எட்டியது. இறக்குமதி கணிசமாக அதிகரித்ததையடுத்து வர்த்தக பற்றாக்குறையானது 1,713 கோடி டாலராகியுள்ளது.

2.தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை பெறுவது கட்டாயமாக்கப்படும், என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.13-ஆவது கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு, சிங்கப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2.ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது (பிரெக்ஸிட்) குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வற்கான மாநாடு, இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அமைப்பின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

2.ஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் போட்டி காலிறுதிக்கு இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

3.ஹாங்காங் பாட்மிண்டன் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தென் கொரிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.


ன்றைய தினம்

  • இந்திய தேசிய பத்திரிக்கை தினம்
  • உலக சகிப்புத் தன்மை தினம்
  • யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1945)
  • முதல் முறையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது(1896)
  • ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஐநா., ஆல் திறக்கப்பட்டது (1914)
  • தென்னகம்.காம் செய்தி குழு