இந்தியா

1.அனைத்து வகையான பருப்புகளின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குவது என மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அஜோய்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
3.போர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் குடுமபம் முதலிடத்தை பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச சகிப்புத் தன்மை தினம் (International Day for Tolerance).
யுனெஸ்கோ அமைப்பு தனது 50ஆவது ஆண்டு விழாவை 1995ஆம் ஆண்டில் கொண்டாடியது. யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 இல் வெளியிட்டது. உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு