Current Affairs – 16 May 2019
தமிழகம்
1.தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு, ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2.பல்வேறு எம்.பி.ஏ. படிப்புகள், இரட்டை பட்டப் படிப்புகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக உயர் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்திருக்கிறது.
இந்தியா
1.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளத்தில் 5 நாள்கள் தாமதமாக ஜூன் 6-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2.பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்த மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம்
1.இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மருத்துவ விபரங்களையும், மின்னணு முறையில் சேமிக்கும், ‘டிஜிட்டல் ஹெல்த் லாக்கர்’ திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகம்
1.ரஷ்யாவில் ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, சிரியா, வட கொரியா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
2.கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா, அமெரிக்காவின் அலபாமா மாகாண பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இன்றைய தினம்
- மலேசியா ஆசிரியர் தினம்
- சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
- ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)
- முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது(1667)
– தென்னகம்.காம் செய்தி குழு