தமிழகம்

1.எழுத்துச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன்  உடல் நலக்குறைவால்  காலமானார்.அவருக்கு வயது 72.

2.பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்படவுள்ளது.


இந்தியா

1.கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

2.மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று மத்தியப் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


வர்த்தகம்

1.இந்தியாவின் ஏப்ரல் மாத ஏற்றுமதி 2,591 கோடி டாலராக (ரூ.1.76 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.


உலகம்

1.ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஸா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே இரண்டாவது நாளாக பதற்றம் நீடித்தது.


விளையாட்டு

1.லி நிங் என்ற விளையாட்டு சீருடை நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) ஒப்பந்தம் செய்துள்ளது.


ன்றைய தினம்

  • மலேசியா ஆசிரியர் தினம்
  • சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
  • ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)
  • முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது(1667)

–தென்னகம்.காம் செய்தி குழு