தமிழகம்

1.கீழடி அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை 15 நாள்களுக்குள் மீண்டும் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.உஜ்ஜலா திட்டத்தின் கீழ், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 416 அஞ்சல் நிலையங்களில் எல்இடி- விளக்குகள், குழல்விளக்குகள், மின்விசிறி ஆகியவை சலுகை விலையில் விற்பனை செய்யப்படுமென தமிழக அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.


இந்தியா

1.மக்களவைத் தேர்தலில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2.மேகாலயத்தில் பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது.


வர்த்தகம்

1.யோனோ கேஷ் செயலியின் மூலம் ஏடிஎம்களில் கார்டு இல்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.சிரியாவில் நடைபெற்ற போரின் காரணமாகக் கடந்த 8 ஆண்டுகளில், 3.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் அரையிறுதிக்கு ஏஞ்சலிக் கெர்பர், பெலிண்டா பென்கிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
  • திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
  • இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
  • முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)

– தென்னகம்.காம் செய்தி குழு