தமிழகம்

1.இந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த விபத்துகளின் அளவு 9 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியா

1.இந்தியாவை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதார சக்தியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவது சவாலான காரியம்; எனினும் இதை எட்டுவது சாத்தியமானதுதான்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சமான 42,602 கோடி டாலரை நெருங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.மருந்து தயாரிப்புத் துறையைச் சேர்ந்த நோவர்டிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவராக சஞ்சய் மூர்தேஸ்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3.இந்தியாவின் உருக்கு உற்பத்தி சென்ற மே மாதத்தில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

4.நாட்டின் ஏற்றுமதி சென்ற மே மாதத்தில் 3.93 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.நெதர்லாந்தில் நடை பெற்று வரும் உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் இந்திய அணி 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

2.எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவேயை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.


ன்றைய தினம்

  • தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
  • ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது(1897)
  • உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)

– தென்னகம்.காம் செய்தி குழு