தமிழகம்

1.கல்வித்துறையில் மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இனி ப்ளுபிரிண்ட்’ அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுமையாக பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.

2.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசு ரூ. 16 கோடி அனுமதி அளித்துள்ளது.


இந்தியா

1.நீதி ஆயோக் அமைப்பின் நிர்வாகக் குழுவின் 4-ஆவது கூட்டம், தில்லியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.


வர்த்தகம்

1.வாராக் கடன்களை தள்ளுபடி செய்ததால் பொதுத் துறை வங்கிகளின் நஷ்டம் நடப்பு நிதியாண்டில் 140 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, ரூ.1.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. இது கடந்த நிதியாண்டைவிட ஒன்றரை மடங்கும் அதிகமாகும்.

2.நாட்டின் ஏற்றுமதி சென்ற மே மாதத்தில் 28.18 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் அதிரடி அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.


விளையாட்டு

1.எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது.மொராக்கோ வீரர் அடித்த சேம் சைட் கோலால் ஈரான் அணி வெற்றி பெற்றது.

2.ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


ன்றைய தினம்

  • தென்னாப்பிரிக்க இளைஞர் தினம்(1976)
  • ஹவாய் குடியரசை அமெரிக்காவுடன் இணைக்கும் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது(1897)
  • உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரரான ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, வஸ்தோக் 6 விண்கலத்தில் பயணமானார்(1963)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் இறந்த தினம்(1925)

–தென்னகம்.காம் செய்தி குழு