தமிழகம்

1.தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 507 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.


இந்தியா

1.வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2.தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

3.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.5.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

4.மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைபவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் விபத்து ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் வகையில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

5.ஹிமாசலப் பிரதேசத்தின் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நடப்பாண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,501 கோடி டாலராக (ரூ.1.75 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 2,770 கோடி டாலருடன் (ரூ.1.94 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 9.71 சதவீதம் குறைவாகும்.

2.மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற ஜூன் மாதத்தில் 2.02 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 23 மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.
இப்பணவீக்கம் முந்தைய மே மாதத்தில் 2.45 சதவீதமாகவும், கடந்த 2018 ஜூன் மாதத்தில் 5.68 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.


உலகம்

1.உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் பொருளாதார வளர்ச்சி இரண்டாவது காலாண்டில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது.


விளையாட்டு

1.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றது இந்திய அணி.
ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன் 251.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை மெஹுலி கோஷ் 250.2 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.


ன்றைய தினம்

  • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
  • ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
  • எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
  • பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)
  • டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)

– தென்னகம்.காம் செய்தி குழு